சண்டே அன்று நோகாமல் செய்ய சோம்பேறி சிக்கன் ரெசிபி இதோ!

சோம்பேறி சிக்கன் ரெசிபிக்கு தக்காளி எதுவும் தேவையில்லை. முக்கியமாக அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை.

இதெல்லாம் தேவை : சிக்கன் - 1/2 கிலோ, பெரிய வெங்காயம் - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் , மிளகாய் தூள், மல்லித் தூள் - தலா 1 டீஸ்பூன்

சீரகத் தூள், மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், வெண்ணெய் , கொத்தமல்லி - சிறிது, உப்பு - சுவைக்கேற்ப

ஒரு வாணலியில் கழுவிய சிக்கன், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும்.

பின் அதில் எடுத்து வைத்த மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்கு பிசைய வேண்டும்.

அந்த வாணலியை அப்படியே எடுத்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் தேவைக்கு ஏற்ப வெண்ணெய் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சோம்பேறி சிக்கன் ரெடி.

சுவைமிகு சோம்பேறி சிக்கன் வறுவலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.