மூல நோய்க்கான உணவு முறைகள் சில...
ஆசனவாயில் உள்ள ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, அதனுள்ளே இருக்கும் ரத்த நாளத்தின் சுவர் மெல்லியதாகி, மலம் கழிக்கும்போது ரத்த நாளங்கள் கிழிந்து ரத்தம் வெளியேறுவதை பைல்ஸ் என்கிறோம்.
சில உணவு முறை பழக்கத்தினால் பைல்ஸ் பிரச்னையில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். குறைப்பாக அசைவ உணவுகளை தற்காலிகமாக தவிர்க்கலாம்.
ஆனால் பாதிப்பு உள்ளவர்கள் மைதா, துரித உணவுகளை நிரந்தரமாக தவிர்க்க வேண்டும்.
அதற்கு பதில் நார்ச்சத்து நிறைந்த நல்ல பாக்டீரியாவை வளர்க்க உதவும் பச்சை காய்கறிகள், கீரை வகைகள், வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா போன்றவை சிறந்தவை.
காலையிலும், இரவிலும் உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன், மோர் பருக வேண்டும்.
இந்துப்பு கலந்த மோர் கஞ்சி 30 நாட்கள் சாப்பிடுவதால் மூல உபத்திரவம் குறையும்.
மூலிகை தைலம் கலந்த வெதுவெதுப்பான நீரில், 20 நிமிடங்கள் அமர்வதால், மூலத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறையும்.