நோய் எதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்தும் சப்போட்டா

கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் ஏ, மெக்னீசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

சப்போட்டாவில் உள்ள குளுக்கோஸ், நமக்கு ஆற்றலை தருகிறது. இதிலுள்ள வைட்டமின்கள், ரத்த நாளங்களை சீராக வைக்கவும், கொழுப்பை நீக்கவும் செய்கிறது.

இதயத்திற்கு வலிமையைச் சேர்க்கிறது.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சப்போட்டா பழச் சாற்றுடன், ஒரு நேந்திரம் பழம் சாப்பிட்டால், விரைவாக குணமாகக்கூடும்.

சப்போட்டா பழச்சாற்றுடன், தேயிலைச் சாறும் சேர்த்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும்; ரத்தக் கடுப்பு நிற்கும்.

கூந்தல் உதிர்வை தடுக்க உதவுவதுடன், கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது.

கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் எலும்புகளை வலுப்படுத்துகின்றன; நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதிலுள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.