ஆரோக்கியம் தரும் கேரட் நெல்லிக்காய் ஜூஸ்!
தேவையானவை: கேரட் - இரண்டு, நெல்லிக்காய் - நான்கு, புதினா இலைகள் - ஒரு மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - அரை மேஜைக்கரண்டி, பனங்கற்கண்டு - ஒரு மேஜைக் கரண்டி.
செய்முறை: கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சதை பகுதியை நறுக்கிக் கொள்ளவும்.
புதினா இலையை சுத்தப்படுத்தி கொள்ளவும்.
பனங்கற்கண்டை லேசாகப் பொடித்து கொள்ளவும்.
அவை எல்லாவற்றையும் மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வடிகட்டி, எலுமிச்சை சாறு பிழிந்தால் ஜூஸ் ரெடி. குளிர வைத்து பருகவும்.