சுவையான சிக்கன் சுக்கா வறுவல்.. செய்வது ரொம்ப ஈஸி...!
ஞாயிறு வந்தாலே போதும்... மீன், மட்டன், சிக்கன் என வீடே மணக்க, மணக்க அசைவ சமையல் களைக்கட்டும்.
'எளிதாக சமைக்கணும்; சுவையும் தூக்கலாக இருக்கணும்' என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, குறைந்த நேரத்திலேயே எளிதாக சிக்கன் சுக்கா வறுவல் செய்யும் ரெசிபி இதோ...
ஒரு கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு போட்டு பொரிந்தவுடன், சோம்பு, கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து, சிக்கனை சேர்த்து கிளறவும்.
சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, தண்ணீர் சேர்க்காமல் சில
நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர், கொரகொரப்பாக அரைத்த இஞ்சி, பூண்டு
விழுதை சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.
மிளகாய்த்தூள், கறிமசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். உப்பு, காரத்தை சரிபார்த்து தேவைக்கேற்ப சேர்த்து மீண்டும் வேகவிடவும். அடுப்பை மிதமான தணலிலேயே வைத்திருக்க வேண்டும்.
நன்றாக வெந்தபின், எலுமிச்சை சாற்றை பிழிந்து, கொத்தமல்லி இலையைத் தூவ வேண்டும். இப்போது பரிமாறுவதற்கு சுவையான சிக்கன் சுக்கா வறுவல் ரெடி.
சாப்பிட சுவையான இந்த ரெசிபியை எளிதாக செய்து விடலாம். இதை சமைக்கும் போது தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவை இன்னும் கூடுதலாக அள்ளும்.