இந்திய டிகிரி காபிக்கு உலகளவில் இரண்டாமிடம்!
உலகின் சிறந்த காபிகள் பட்டியலில் இந்தியாவின் ‛‛பில்டர்'' காபிக்கு இரண்டாம் கிடைத்துள்ளதாக ''டேஸ்ட் அட்லஸ்' என்ற உணவு நிபுணத்துவ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு வகையான காபி பீன்ஸ் மற்றும் தயாரிப்பு பாணிகள் உள்ளன.
மக்கள் பெரிதும் விரும்பும் காபி அதன் கசப்பான சுவைக்காக அறியப்பட்ட ஒரு நறுமணப் பானமாகும்.
உலகளவில் பிரபலமான டேஸ்ட் அட்லஸ் என்ற அமைப்பு உள்ளூர் உணவு முதல் உலகளவிலான உணவு தொடர்பான ஆய்வில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
இந்த அமைப்பு 'உலகின் சிறந்த 38 காபிகளின்' புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் முதலிடத்தில் 'கியூபன் எஸ்பிரெசோ' முதலிடத்திலும், 'சவுத் இந்தியன் பில்டர் காபி' இரண்டாவது இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து சிறந்த 10 காபிகளின் தரவரிசை பட்டியலில் கிரீஸ் நாட்டின் இஸ்பிரஸ்ஸோ பெர்டோ, பெர்டோ கப்சீனோ, புரோப்பே காபி ஆகிய மூன்று நிறுவனங்களின் காபிகள் 3 , 4, 9வது இடங்களை பிடித்துள்ளது.
'கியூபன் எஸ்பிரெஸோ', சர்க்கரையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இனிப்பு எஸ்பிரெசோ ஷாட்டைக் கொண்டுள்ளது. இந்த காபியின் மேல் இருக்கும் ஒளி-பழுப்பு நிற நுரையே அனைவரையும் கவரும்.