கீரையை மிஞ்சும் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள் சில
கொண்டைக்கடலை இரும்புச்சத்து கொண்ட சிறந்த உணவு. ஒரு கப் கடலையில் கீரையை விட அதிகமாக இரும்புச்சத்து உள்ளது.
இது தவிர நார்ச்சத்து, புரதம், போலேட் போன்றவை உள்ளன.
28 கிராம் பூசணி விதைகளில் 2.5 மி.கி., இரும்புச்சத்து உள்ளதால், இது சூப்பரான ஸ்நாக்ஸ். வைட்டமின் கே, துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம் ஆகியவையும் இதிலுள்ளன.
இந்த விதைகளை உட்கொள்வது நீரிழிவு பாதிப்பு, மனச்சோர்வை குறைக்க உதவுகிறது.
ப்ரோக்கோலியில் இரும்புச்சத்து மட்டுமல்ல; பல்வேறு உட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
குயினோவா... இந்த தானியம் இரும்புச்சத்து கொண்டது. மற்ற தானியங்களை விடவும் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது.
எள் விதைகள்... இரும்புச்சத்து, கால்சியம், ஆக்ஸிஜனேற்றிகள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன.
எனவே இதை மிட்டாய், துவையல் மற்றும் எள் உருண்டை என பல வழிகளில் உட்கொள்ளலாம்.