டேஸ்டியான அன்னாசி பழ பாயாசம்

தேவையானப் பொருட்கள்: அன்னாசி பழ துண்டுகள் - 1 கப், கன்டென்ஸ்டு மில்க் - 1 கப், காய்ச்சிய பால் - 1 லிட்டர், ஜவ்வரிசி -1/2 கப்.

அன்னாசி எசன்ஸ் - 1 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, முந்திரி, உலர் திராட்சை - 15.

அன்னாசி பழத்தின் தோல்களை நீக்கிய பின், அவற்றை ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்.

நன்றாக ஊற வைத்த ஜவ்வரிசியை முக்கால் பதத்துக்கு வேக வைத்து தனியே வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, அன்னாசி துண்டுகளை போடவும். இதில், ஜவ்வரிசியை சேர்த்து 5 நிமிடங்கள் மீண்டும் வேக வைக்கவும்.

பின், அதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட வேண்டும்.

இறுதியாக அன்னாசி எசன்ஸ், நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்தால், சுவையான அன்னாசி பழ பாயசம் ரெடி.