வாழைத்தண்டு சிறுநீரகக் கற்களை போக்குமா?

வாழைத்தண்டு நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்தது. மேலும் துவர்ப்பு சுவை அதிகமாக இருக்கும்.

இதில் பி6, சி, பொட்டாசியம், மக்னீசியம், செம்பு, இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதில் கலோரிகளும் மிக மிகக் குறைவு.

வாழைத்தண்டு சாற்றுக்கு, சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு. இதை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக அல்லது சாலட்டாக எடுத்துக்கொள்ளலாம்.

வாழைத்தண்டு ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதோடு, இன்சுலின் உற்பத்தியையும் தூண்டுகிறது.

வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கும்போது குடலில் உள்ள அமிலத்தன்மை சீராகும். மேலும் ஜீரண மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோயை சீராக்கும் தன்மை உள்ளது.

சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும். மேலும் கல்லீரலை வலுவடைய செய்யும்.

வாழைத்தண்டில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.