சுவையான பட்டாணி இட்லி ரெசிபி!
புது வகையான இட்லி சாப்பிட, ஹோட்டலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே பல விதமான இட்லிகள் செய்யலாம். பட்டாணி இட்லியும் மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்: ரவை - 2 கப், பட்டாணி - 1 கப், வெந்தய கீரை - ஒரு சிறிய கட்டு
தயிர் - அரை கப், ஓட்ஸ் - 1 ஸ்பூன், பாகற்காய் தோல் - 2 ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, இஞ்சி - சிறிய துண்டு
செய்முறை: முதலில் பட்டாணியை கழுவி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அதை மிக்சியில் போட்டு, கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு, அதில் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
அந்த கலவையில் பொடியாக நறுக்கிய பாகற்காய் தோல், வெந்தய கீரை, உப்பு, ஓட்ஸ், இஞ்சி, விழுதாக அரைத்த பச்சை மிளகாய் போட்டு. இட்லி மாவு பதத்துக்கு அரைக்க வேண்டும்.
மாவில் தயிர் சேர்த்து, 10 முதல் 15 நிமிடம் வரை ஊற வைக்கவும். அதன்பின் இட்லி தட்டில் இட்லியை ஊற்றி வேக வைக்கவும். சூடாக பரிமாறவும்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும் அல்லது உங்களுக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாரிலும் தொட்டு சாப்பிடலாம்.
ஓட்ஸ், பாகற்காய் தோல், வெந்தய கீரை சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. விருப்பம் உள்ளவர்கள் சிறிய துண்டு கேரட்டை பொடியாக நறுக்கி, இட்லி மாவில் சேர்த்து கொள்ளலாம்.