கோடையில் தெம்பு தரும் கம்பு! உஷ்ணத்தையும் தணிக்கும்!

கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் பல நிறைந்துள்ளன.

மேலும் கம்பில் அதிக அளவு கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன.

கம்பை கூழாகவோ, கஞ்சியாகவோ செஞ்சு, மோர் சேர்த்து குடித்து வந்தால், வெயில் காலத்துல் ஏற்படும் உடல் உஷ்ணத்தைத் நன்கு தணிக்கும்.

கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால் நீரிழிவு குறைபாடு ஏற்படாமல் காக்க உதவும்.

செரிமானக் கோளாறு இருப்பவர்கள் ஒருவேளை கம்பு உணவை எடுப்பதால் வயிறு சம்பந்தமான பிரச்னை நீங்கும்.

மேலும் குடலை சுத்தம் செய்யக்கூடிய கம்பு, குடல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும்.

கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுப்பதால் இதய நாளங்கள் தொடர்பான பிரச்னைகளை தடுக்கும்.

குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுக்காக்கும்.

கம்பை கூழ், புட்டு, ரொட்டி, தோசை, அவுல் என உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஏதேனும் ஒரு வழியில் சேரத்துகொள்ளலாம்.