வெயிலுக்கு குளிர்ச்சியான வெள்ளரிக்காய் சாதம்

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கடலை பருப்பு- 1 டீஸ்பூன், வடித்த சாதம் - 1 கப், காய்ந்த மிளகாய்- 2,

மஞ்சள் தூள், குருமிளகு தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை- 1 கொத்து, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, வேர்க்கடலை - சிறிதளவு.

வெள்ளரிக்காயை நன்கு துருவி கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளிக்கவும்.

தொடர்ந்து, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பின், துருவி வைத்த வெள்ளரிக்காயை சேர்த்து வதக்கவும்.

தேவையானளவு உப்பு, மஞ்சள் பவுடர், மிளகு துாள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

தண்ணீர் வற்றியவுடன் சாதம் போட்டு கிளறி இறக்கினால் சுவையான, வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் சாதம் ரெடி.