புரதச்சத்து நிறைந்த காளான்.. டயட் பிரியர்களுக்கு சூப்பர் சாய்ஸ்!

காளானில் ஆரஞ்சுப்பழத்தைவிட 4 மடங்கும், ஆப்பிள் பழத்தைவிட 12 மடங்கும், முட்டைக் கோஸைவிட இரு மடங்கும், புரதச்சத்தும், மருத்துவக் குணங்களும் நிரம்பியுள்ளன.

100 கிராம் காளானில், 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு, சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.

காளானில் புரதம் மட்டுமின்றி இரும்புச்சத்து, பலவிதமான வைட்டமின்களும் உள்ளன. குறிப்பாக வைட்டமின் ஏ அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் பி, டி, இ ஆகியனவும் உள்ளன.

100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து, 447 மி.கி. உள்ளது. சோடியம், 9 மி.கி., உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

எளிதில் ஜீரணமாகும் மேலும் மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள், தினமும் காளான் சூப் அருந்தி வந்தால், விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

இதை உண்பதால் உடலில் கொலாஸ்டிரல் சேராது. இதனாலேயே உலகம் முழுவதும் காளான், விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது.