உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பட்டை டீ !
தேவையான பொருள்கள்: லவங்கப்பட்டை - 1 , தண்ணீர் - 1 கப், தேன் அல்லது எலுமிச்சை சிறிதளவு.
சிறிதளவு இலவங்கப்பட்டையை தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கழித்து வடிகட்டி அப்படியே குடிக்கலாம்.
இல்லாவிட்டால், சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறை சேர்த்து குடிக்கலாம்.
இந்த பட்டை டீ அழற்சி மற்றும் வீக்கத்தை குணப்படுத்த உதவுகிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உடலில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது; உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எனவே, இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த லவங்கப்பட்டை டீயை அவ்வப்போது முயற்சிக்கலாம்.