பாரம்பரிய சுவையில் தினை வெண் பொங்கல்
தேவையானப் பொருட்கள்: தினை அரிசி - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு, மிளகு அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை.
பாசிப்பருப்பு கால் கப், உப்பு மற்றும் எண்ணெய் - தேவைக்கேற்ப, கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், முந்திரி -10, கறிவேப்பிலை - சிறிது
பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
குக்கரில் சுத்தம் செய்த தினையரிசி, பாசிப்பருப்பு, உப்பு மற்றும் தேவையான நீர் சேர்த்து வேக விடவும்.
பிரஷர் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அணைக்கவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு சூடானவுடன் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உ.பருப்பு, மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான தினை வெண் பொங்கல் ரெடி.