கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கான உணவு முறை இதோ
முழு தானிய உணவுகள், பட்டை தீட்டப்படாத அரிசி உணவு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.
அசைவ உணவில் மீன் சேர்ப்பது நல்லது.
மிதமான உடற்பயிற்சி அல்லது வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.
டாக்டர் அறிவுரைப்படி கால்சியம், வைட்டமின் டி3 மாத்திரைகளை சாப்பிடலாம்.
சிவப்பு இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், இனிப்பு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
உப்பை குறைவாக உணவில் சேர்க்க வேண்டும்.