ஆரோக்கியம் தரும் டீடாக்ஸ் ஸ்மூத்தி

சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேயளவு உடலில் சேரும் கழிவுகளை அகற்றுவதும் முக்கியமானது.

பாலக்கீரை, வெள்ளரிக்காய் போன்றவற்றை பயன்படுத்தி குடல் கழிவுகளை வெளியேற்ற உதவும் ஆரோக்கியமான ஸ்மூத்தி செய்யும் வழிமுறை இதோ...

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் : 1, அன்னாசி பழம் : 1 கப், , இஞ்சி : 1 இஞ்ச் அளவு, பாலக்கீரை : 1 கைப்பிடி, எலுமிச்சை : 1/2 பழம், வெள்ளை எள் : 1 டீஸ்பூன்.

வெள்ளரிக்காய், அன்னாச்சி பழத்தை துண்டுகளாக நறுக்கவும்.

இதனுடன், பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் பாலக்கீரையுடன் சிறிதளவு தண்ணீரை சேர்த்து மிக்சி ஜாரில் நன்றாக அரைக்கவும்.

இதில், வெள்ளை எள்ளை தூவினால், இப்போது டீடாக்ஸ் ஸ்மூத்தி ரெடி.

சரிவர சாப்பிடாமல் அவசரக்கதியில் கல்லூரி, வேலைக்கு செல்லும் போது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலை பிரேக்பாஸ்டுக்கு இந்த ஸ்மூத்தியை சாப்பிடலாம்.