பனிக்காலத்திற்கு ஏற்ற உணவு முறை!! டிப்ஸ் டிப்ஸ்...
குளிர்காலத்தில் இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை மற்றும் பசைத்தன்மை உள்ள உணவுகள் நல்லது.
கோதுமை கஞ்சி மற்றும் ஆட்டுக்கால் சூப்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
சுரைக்காய், புடலங்காய், பறங்கிக்காய் போன்ற நீர்க்காய்கள் பனிக்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை.
பழங்களில் பப்பாளி, அன்னாசி பழங்கள் சாப்பிடலாம்.
நாட்டுக்கோழி மற்றும் வெள்ளாட்டுக் கறி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கதகதப்பான உடைகளுடன் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது, குளிர்கால தசை இறுக்கத்தை சீராக்கும். வெவெயில் படும்படியாக இருப்பது நல்லது.
குளிர்காலங்களில் பச்சைத் தண்ணீரை தவிர்த்து, சுடு தண்ணீரில் குளிக்கலாம்.
உங்களின் உடைகள், விரிப்புகள் கதகதப்பாக இருக்கட்டும்.