ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடைய இப்பழத்தில் வைட்டமின் சி, இரும்பு, நியாசின், ஆன்டி ஆக்சிடெண்ட், கார்போஹைட்ரேட், புரதம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இப்பழத்திலுள்ள கொழுப்பு மற்றும் நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும்.
உடலில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுப்பதால், மாரடைப்பு அபாயம் குறைகிறது.
ஆஸ்துமா, நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்தும். கண் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது.
இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் கூந்தல், தோல் மற்றும் கை, கால் நகங்கள் பளபளப்புடன் இருக்கும். உடல் உறுப்புகள் சீராக இயங்க செய்யும்.
எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவும் கால்ஷியம், பாஸ்பரஸ் சத்துக்கள் இதில் அதிகமுள்ளன.
ரம்புட்டான்
பழத்திலுள்ள நீர்ச்சத்து, நா வறட்சியைத் தடுக்கும். உடல் உழைப்புக்கு
ஆற்றலை தரும். உடல் சீரான வளர்ச்சிக்கு இப்பழம் முக்கிய பங்காற்றுகிறது.
பாஸ்பரஸ் இருப்பதால், சிறுநீரகத்திலிருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
பக்க விளைவுகளுக்கு வாய்ப்புள்ளதால் கர்ப்பிணிகள்,
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
கட்டாயமாக டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.