ஹெல்த்தியான வாழைப்பூ சட்னி !
தேவையான பொருட்கள்: வாழைப்பூ - 1, பச்சை மிளகாய் அல்லது வரமிளகாய் - 3,
பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், இஞ்சி - சிறிதளவு, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூாடனதும் சுத்தம் செய்த வாழைப்பூ, துண்டாக்கிய பச்சை மிளகாய், துருவிய தேங்காய், நறுக்கிய இஞ்சியை நன்றாக வறுக்கவும்.
சிறிது நேரம் கழித்து சூடு ஆறியவுடன் தேவையானளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
இப்போது, ஹெல்த்தியான மற்றும் சுவையான 'வாழைப்பூ சட்னி' ரெடி.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சட்னியை இட்லி, தோசைக்கு சைடு டிஷ் ஆக சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.