ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கும் பார்லி! நன்மைகள் ஏராளம்...
பார்லியில் அதிகளவில் பாஸ்பரஸ், நியாசின், பொட்டாசியம், கோலின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் உள்ளது. 100 கிராம் பார்லி அரிசியில், ஒரு நாளைக்கு தேவையான பாதி நார்ச்சத்து கிடைத்து விடும்.
உடல் எடை, கொலஸ்ட்ரால் மற்றும் சுகர் அளவை குறைக்க, ஓட்ஸ் எடுத்துக் கொள்பவர்கள், அதற்கு பதிலாக, பார்லி சாப்பிடலாம்.
டைப் 2 டயாபடீஸ் நோயாளிகள், அரிசி சாதம் சாப்பிடுவதை விட, பார்லி நீர் குடித்தால், ரத்த குளுக்கோஸ் அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.
இதில் உள்ள பாஸ்பரஸ் உப்பு, மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. நரம்புகளை பலப்படுத்தும், வைட்டமின் பியும் உள்ளது.
பார்லியில் உள்ள அதிகளவு நார்சத்து, ஆன்ட்டி ஆக்சிடெண்ட், பிளோவனாய்ட்ஸ், வைட்டமின் இ, ஏ மற்றும் செலினியம் சத்து, நுரையீரலின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
காய்ச்சல் வராமல் தடுத்து, உடலின் வெப்ப நிலையை சமநிலையில் வைத்திருக்க உதவும். மூட்டு வலி உள்ளவர்களும், பார்லி கஞ்சி சாப்பிடலாம்.
காய்கறிகள் சமைக்கும் போது, பார்லி பவுடரை சிறிதளவு சேர்த்துக் கொண்டால், சுவையாக இருக்கும். தோசை மாவில் கலந்தும் சாப்பிடலாம்.
மருந்துகளின் வீரியத்தை குறைத்து விடும் என்பதால், மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது மட்டும், பார்லி சாப்பிட கூடாது.