வெயிலுக்கு இதமாக சில்லென்ற நுங்கு, இளநீர் ஜூஸ்
தேவையானப் பொருட்கள்: நுங்கு - 5, இளநீர் - 1 டம்ளர், நன்னாரி சிரப் - 2 டேபிள் ஸ்பூன், தேவையானளவு சர்க்கரை.
முதலில் நுங்குத் தோலை முழுவதுமாக உரித்துக் கொள்ளவும்.
பின், மிக்சியில் நுங்குடன் நன்னாரி சிரப் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
இளநீரில் பாதியளவு மட்டும் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்தெடுக்கவும்.
இந்த கலவையை மீதமுள்ள இளநீருடன் சேர்த்து கலக்கினால், பிரெஷ்ஷான மற்றும் சுவையான நுங்கு ஜூஸ் இப்போது ரெடி.
இதை அப்படியேவும் குடிக்கலாம் அல்லது பிரிட்ஜ்ஜில் சிறிது நேரம் வைத்து 'சில்'லென்றும் குழந்தைகளுக்கு தரலாம்.
கூடுதல் சுவைக்கு விருப்பப்பட்டால் சிறிதளவு சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.