குட்டீஸ்களுக்கு ஹெல்த்தியான சாக்லேட் குல்பி ஐஸ்

தேவையானப் பொருட்கள் : பாதாம் பருப்பு : 15 - 20, வெண்ணிலா எசன்ஸ் : 1 டீஸ்பூன், கோக்கோ பவுடர் : 3 டேபிள் ஸ்பூன், வாழைப்பழம் : 2, பேரீச்சம்பழம் : 4 - 5

முதல் நாள் இரவு பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊற வைத்து, தோலை உரித்துக் கொள்ளவும்.

கோகோ பவுடர், வெண்ணிலா எசன்ஸ், பாதாம் பருப்பு மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவற்றை அரை கப் தண்ணீர் சேர்த்து பிளெண்டர் அல்லது மிக்சி ஜாரில் நைஸாக அரைக்கவும்.

பேரீச்சம்பழம் மிருதுவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்தும் பயன்படுத்தலாம்.

இந்த கலவையுடன் பழுத்த வாழைப்பழங்களை சேர்த்து அரைக்கவும். இப்பொழுது கிரீமி பதத்தில் இந்த கலவை இருக்கக்கூடும்.

இவற்றை குல்பி ஐஸ் மோல்டுகளில் ஊற்றி, ஐஸ்கிரீம் ஸ்டிக்கையும் செருகி பிரீஸரில் வைக்கவும். குறைந்தப்பட்சமாக 6 முதல் 8 மணி நேரம் வரை வைக்க வேண்டும்.

ஒரு கப்பில் தண்ணீரை ஊற்றி, அதில் இந்த ஐஸ் மோல்டுகளை 10 நொடிகள் வரை வைத்திருந்து, மிருதுவாக பிடித்து இழுத்தால் சாக்லேட் குல்பி ஐஸ் இப்போது ரெடி.

உங்களின் விருப்பத்துக்கேற்ப பொடிப்பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரிப் பருப்புகளை இதன் மீது தூவினால், குழந்தைகள் டக்கென்று ஒரு சில நிமிடங்களில் முடித்து விடுவர்.

இனிப்புச் சுவைக்கு வாழைப்பழம், பேரீச்சம்பழம் என இயற்கையான பொருட்கள் சேர்ப்பதால் சர்க்கரை தேவையில்லை.