தீபாவளி காரவகையை சிறப்பாக்க டிப்ஸ்!
காராச்சேவு செய்யும் போது, மாவை சற்று கெட்டியாகப் பிசைந்து கொள்வது அவசியம்.
எண்ணெயுடன் சிறிதளவு நெய் சேர்த்து பலகாரங்களை பொரித்தெடுத்தால் வாசனையும், சுவையும் கூடும்.
மகிழம்பூ முறுக்கு செய்ய, இரண்டு கப் அரிசி மாவு, முக்கால் கப் பயத்தம் பருப்பு, முக்கால் கப் நெய், கால் கப் கடலைப்பருப்பு என்ற அளவு சரியாக இருக்கும்.
தேன்குழல், முறுக்கு செய்யும் போது பெருங்காயத்துாள் மற்றும் எள் சேர்த்து செய்யலாம்.
தட்டை செய்யும்போது, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொரு உருண்டையும் மஸ்லின் துணியின் மீது வைத்து தட்டைகளாகத் தட்டினால், மாவிலுள்ள ஈரத்தை துணி இழுத்துக் கொள்ளும்.
பின்னர், எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுத்தால், தட்டை மொறுமொறுப்பாக இருக்கும்.
வாய் அகலமான இரும்பு வாணலி அல்லது அடிகனமான வாணலியை பலகாரங்களைப் பொரிக்க உபயோகிக்கவும்.