யோகர்ட்டில் கொட்டிக்கிடக்குது நன்மைகள் - யோசிக்காம சாப்பிடுங்க!

பாலின் உப பொருளான யோகர்ட்டில் புரதம், கால்சியம், பி காம்பிளக்ஸ் வைட்டமின்கள் என உடல் இயக்கத்திற்கு தேவையான முதன்மை சத்துக்கள் நிரம்பியுள்ளன.

புரோபயாடிக் நிறைந்த யோகர்ட் சாப்பிடுவதால் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க யோகர்ட் உதவும்; மலச்சிக்கலை போக்கும்.

இதிலுள்ள மெக்னீசியம், செலினியம் மற்றும் ஜிங் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட, இனிப்பில்லாத யோகர்ட்டை தொடர்ந்து உட்கொள்வதால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பில்லாத யோகர்ட் மிகவும் நல்லது.

யோகர்ட்டில் உள்ள அதிக புரதச் சத்து அதனை உண்டவுடன் திம்மென உணரச் செய்யும். பசியை குறைக்கும். அதனால் அதிக கலோரி உணவுகளை சாப்பிட மாட்டோம்; உடல் எடை குறையும்.

பொதுவாகவே பால் பொருட்களில் கால்சியம் அதிகம். அதிலும் யோகர்ட்டை கால்சியம் பேக்டரி என்றே சொல்லலாம். எனவே இது எலும்புகளை வலுவாக்க சிறந்ததாக உள்ளது.

யோகர்ட்டில் உள்ள புரோபயாட்டிக்குகள் பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றை குறைத்து மனதை லேசாக்கும்.