வலிகளை போக்கும் அற்புத உணவு முடக்கத்தான் தோசை!

முடக்கத்தான் கீரையில் காலிகோஸின் குவர்செடின், அபிஜெனின், ப்ரோடோகேடிகுயிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.

கை , கால் மூட்டு வலி , எலும்பு தேய்மானம், முடக்கு வாதம் , உடல் வலி உள்ளிட்ட பிரச்னைகளை போக்கும் தன்மை உள்ளது. முடக்கத்தான் கொண்டு எப்படி தோசை செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.

இதெல்லாம் தேவை: முடக்கத்தான் கீரை - 2 கப், புழுங்கல் அரிசி - 1 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு ஆகிவற்றை ஒன்றாக சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும்.

மிஸ்சியில் அரைப்பவராக இருந்தால் 4 முதல் 5 மணி நேரம் வரையில் ஊற வைக்க வேண்டும்.

ஓரளவிற்கு அரைந்தவுடன் , ஓடிக்கொண்டிருக்கும் மாவில் சுத்தம் செய்து , நறுக்கிய முடக்கத்தான் கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாவினை 7 முதல் 8 மணி நேரம் புளிக்க வைத்துக்கொள்ளுங்கள். தற்போது தோசை மாவு தயார்.

நெய் அல்லது நல்லெண்ணையை சேர்த்து மொறு மொறுவென தோசை வார்க்கலாம். பிடித்த சட்னியுடன் முடக்கத்தான் தோசையை சுவைக்கலாம்.