இட்லி மாவில் ஜிலேபி… குட்டீஸ் ஹேப்பி!
இட்லி மாவில் ஜிலேபி எப்படி தயார் செய்யலாம் என்பதற்கான எளிமையான குறிப்பை இப்போது பார்க்கலாம்.
இதெல்லாம் தேவை : இட்லி மாவு - ஒரு கப், ஃபுட் கலர் - அரை ஸ்பூன், உப்பு கால் - ஸ்பூன், சர்க்கரை - அரை கப்.
அரை கப் சர்க்கரைக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கெட்டியாகி பாகு வடிவத்திற்கு வரும்போது அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஆற விடவும்.
ஓரளவு சர்க்கரைப் பாகு ஆறும் போது ஒரு சிட்டிகை ஃபுட் கலர் சேர்த்து கலந்து விடவும்.
இட்லி மாவுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து, அந்த மாவை ஒரு மருதாணி கோன் வடிவில் உள்ள பேப்பரில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
எண்ணெயை சூடேற்றி மாவை ஜிலேபி வடிவில் எண்ணெயின் மீது பிழிந்து விடவும்.
ஜிலேபி தயார் ஆனதும், அவற்றை முன்பு தயார் செய்துள்ள சர்க்கரைப் பாகில் சேர்த்து நன்கு ஊற விடவும்.
சுவையான ஜிலேபி தயார்...குறிப்பு : மாவு சிறிது தண்ணீராக இருந்தால், கொஞ்சம் மைதா மாவு அதில் சேர்க்கலாம்.