நல்ல கொழுப்பை அதிகரிக்கும் பிஸ்தா… தினமும் உண்ணலாம்!!
பிஸ்தாவில் பொட்டாசியம், நல்ல கொழுப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட், கெட்ட கொலஸ்டிராலை எதிர்த்துப் போராடும் ஃபைடோஸ்டிரோல் உள்ளிட்டவை அதிகம் நிறைந்தது.
பிஸ்தா ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து, ரத்தத்தை சுத்தமாக்குகிறது. மேலும் ஹீமோகுளோபின் உற்பத்தியை மேம்படுத்தும்.
இது நினைவாற்றலை அதிகரிக்க உதவும். அதனால் சூடான பாலில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் நியாபக சக்தி அதிகரிக்கும்.
பிஸ்தா உடல் எடையை அதிகரிக்க உதவும். அதனால் தினமும் 4 முதல் 5 பிஸ்தா பருப்பை உண்ணலாம். குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக தரலாம்.
இதய நோய் அபாயத்தை குறைக்க பிஸ்தா உண்பது மிகவும் நல்லது. குறிப்பாக எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.
நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பிஸ்தா பருப்புகளை சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.
பிஸ்தாவில் கெரோட்டினாய்டுகள், லுடெயின் போன்ற சத்துகள் உள்ளதால் கருவிழி சிதைவை தடுக்க உதவும். கண் புரை பாதிப்புகளையும் ஏற்படால் தடுக்கும்.
பிஸ்தாவில் இருக்கும் வைட்டமின் இ சத்து சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பொருளாக செயல்பட்டு சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்கும்.