வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் இந்துப்பு…
ராக் சால்ட் , இமயமலை உப்பு, ஹிமாலயன் சால்ட் என்ற பல பெயர்களில் இந்துப்பு அழைக்கப்படுகிறது.
காரணம் இவை இமயமலையிலும், வட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளிலும் பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.
ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் காணப்படும் இதற்கு மருத்துவக் குணம் நிறைய உள்ளது.
இந்துப்பில் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம் மெக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், இருப்பு உள்ளிட்ட நுண் சத்துக்கள் உள்ளன.
மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது இந்துப்பு.
பல் வலி, ஈறு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு இளஞ்சூடான நீரில் இந்துப்பை போட்டு வாய் கொப்பளிக்கலாம். மேலும் இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.
உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு ஒத்தடமிட இந்து உப்பை பயன்படுத்தலாம்.
இந்துப்புடன், சீரகம், ஓமம், திப்பிலி, சுக்கு, கடுக்காய் போன்றவற்றை சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்துப்பு சூரணம், வாந்தி, பசி மந்தம், வீக்கம் போன்ற பிரச்னைகளை தீர்வாக இருக்கும்.