முருங்கைப் பூ வடை ரெசிபி இதோ
தேவையானப் பொருட்கள்: முருங்கைப் பூ - 1 கப், துவரம் பருப்பு - 50 கிராம், பெரிய வெங்காயம் - 2, காய்ந்த மிளகாய் - 5.
பூண்டு, சீரகம், கடுகு, உப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
முருங்கை பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
அதனுடன் வேக வைத்த துவரம் பருப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கிள்ளிய காய்ந்த மிளகாய், அரைத்த பூண்டு, சீரகம், கடுகு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசையவும்.
கைகளால் வடைகளாக தட்டி, கடாயில் தேவையானளவு எண்ணெய் விட்டு சூடானவுடன், போட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சத்துகள் நிறைந்த மற்றும் சுவையான முருங்கைப்பூ வடை ரெடி. அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.