நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன?

பனீர்... முடிந்தளவு பாலில் செய்யப்படும் பனீர் பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

உலர் பழங்கள்... இதில் சர்க்கரை அளவு அதிகமிருப்பதால் முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பிரெஷ்ஷான ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிட முயற்சிக்கலாம்.

அதிகளவிலான வெள்ளை சாதம் உட்கொண்டாலும் ஆபத்துக்கு வழிவகுக்கும். எனவே, கவுனி அரிசி, சிவப்பு அரிசி போன்றவற்றை பயன்படுத்தலாம்.

சோடா மற்றும் குளிர்பானங்களில் சர்க்கரை அதிகளவில் இருப்பதால், முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி... பதப்படுத்தப்பட்ட சிக்கன், மட்டன் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட இறைச்சிகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயன கலவைகள் இருப்பதால் முடிந்தளவு தவிர்க்கலாம்.

பிஸ்கெட், ஐஸ்கிரீம், கேக் மற்றும் வறுக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளக்கூடாது.