குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிக்ஸட் வெஜ் சூப்
தேவையானவை: காய்கறி கலவை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், பூண்டு பல் - இரண்டு (பொடியாக நறுக்கி கொள்ளவும்).
வெண்ணெய், கார்ன் ப்ளார் மற்றும் எலுமிச்சை சாறு - தலா ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் டீஸ்பூன், மிளகுத்துாள் மற்றும் உப்பு - தேவையான அளவு.
கடாயில் வெண்ணெயைப் போட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிக் கலவையைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்தவுடன், கார்ன் ப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்து சேர்க்கவும்.
பின், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அடுப்பை அணைத்து இறக்கவும். இதில், மிளகுத்துாளைத் துாவி பரிமாறலாம்.