ஹோட்டல் ஸ்டைல் டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்யலாம்!!

சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமானது டிராகன் சிக்கன். குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த டிராகன் சிக்கனை எப்படி வீட்டில் செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.

இதெல்லாம் தேவை : எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ, சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1/2 டீஸ்பூன், வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு

இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், கொத்தமல்லி - 1 கையளவு, குடைமிளகாய் - 1 வெங்காயம் - 1, வெங்காயத் தாள் - சிறிதளவு. இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஊற வைக்க : இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன், முட்டை வெள்ளைக்கரு - 1, சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :சிக்கனை நீளமாக வெட்டவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1 மணி நேரம் ஊறத்து பின் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ஒரு தவாவை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கொதிக்க விடவும்.

சற்று கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து சில நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

சுவையான டிராகன் சிக்கன் ரெடி. அதில் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி பரிமாறலாம்.