கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க பயோட்டின் நிறைந்த உணவுகள் சில

கூந்தல் உதிர்வை குறைக்கக்கூடிய பயோட்டின், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வால்நட்களில் உள்ளன.

அவகேடோ பழத்தில் பயோட்டின், வைட்டமின் ஈ மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.

பயோட்டின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு, உச்சந்தலையின் ஆரோக்கியத்துக்கு முக்கியமானது.

சூரியகாந்தி விதைகளிலுள்ள பயோட்டின், செலினியம் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தை தந்து வேர்க்கால்களை வலுப்படுத்துகின்றன.

இரும்பு, பயோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த கீரை, கூந்தல் உதிர்வை தடுத்து, வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

பயோட்டின், வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த பாதாம், கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.

பயோட்டின் மற்றும் புரதம் நிறைந்த முட்டை கூந்தல் வேர்க்கால்களை வலுப்படுத்தி, வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.