உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 7 ஸ்மூத்திகள்

மாம்பழம், சியா மற்றும் தேங்காய் பால் கலந்த ஸ்மூத்தியில் ஆக்ஸிஜனேற்றங்கள், ஒமேகா 3 உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், செரிமானம், சரும பளபளப்பை அதிகரிக்கிறது.

அன்னாசிப்பழம், நெல்லிக்காய் மற்றும் பசலைக்கீரை கலந்த ஸ்மூத்தியில் இரும்பு, வைட்டமின் சி சத்துகள் நிறைந்துள்ளன; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கேரட், இஞ்சி மற்றும் ஆரஞ்சு... இதிலுள்ள பீட்டா கரோட்டின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆப்பிள் , ஓட்ஸ் மற்றும் லவங்கப்பட்டை... இந்த நார்ச்சத்து நிறைந்த ஸ்மூத்தி பசி உணர்வை கட்டுப்படுத்தும், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

பாதாம்பால், பேரீச்சம்பழம் மற்றும் கோகோ பவுடர் கலந்த ஸ்மூத்தி ஆரோக்கியம் மட்டுமின்றி மனதுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

பப்பாளி, மஞ்சள் மற்றும் இளநீர் கலந்த ஸ்மூத்தி செரிமானத்துக்கும், அழற்சி எதிர்ப்புக்கும் சிறந்தது.

வாழைப்பழம், வேர்க்கடலை மற்றும் ஆளி விதைகள் கலந்த ஸ்மூத்தியை ஜிம் செல்பவர்கள் உட்கொள்ள புரதச்சத்து கிடைக்கும்.