தேர்வு சமயத்தில் மாணவர்களுக்கு ஏற்ற உணவுகள்
தேர்வு நடக்கும் காலங்களில் மூன்று வேளை சாப்பிட வேண்டும். என்ன காரணமாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலை உணவு தான் உடலுக்கு அதிக சக்தியைத் தருகிறது.
அரிசி சாதம், தக்காளிசாதம், பருப்புசாதம், ரசம்சாதம், கீரை சாதம் மதிய உணவுக்கு நல்லது. புளியோதரை, லெமன் சாதம் போன்ற புளிப்புள்ள சாதவகைகளைத் தவிர்க்க வேண்டும்.
இரவில் வயிறு முட்ட சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அளவாக உண்ணவும். இரவில் படுக்கச் செல்லும் போது பால் குடிக்க வேண்டும்.
தேர்வு நேரத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தத்தால் மாணவர்களுக்கு வயிற்றில் அதிகமாக அமிலம் சுரந்து அல்சர், அஜீரணம்போன்றவை தலைகாட்டும்.
தயிர், அமிலம் சுரப்பதைக்கட்டுப்படுத்துவதோடு, ஜீரண சக்தியை ஒழுங்குபடுத்தும்.
தேர்வு நேரங்களில் நோய்வராமல் பாதுகாக்க வேண்டுமானால் தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டும். பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
குறிப்பாக வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, தக்காளி, பப்பாளி ஆகியவை உடனடியாக புத்துணர்வைத் தருபவை.
மாலை நேரத்தில் சுண்டல், வேகவைத்த வேர்க்கடலை, பாதாம்பருப்பு, தேனில் ஊறவைத்த பேரீட்சை, அத்திப்பழம், முளைகட்டிய பயறுகள், காய்கறிசாலட், பழ சாலட் போன்றவற்றை சாப்பிடலாம்.