சைவ பிரியர்களை கவரும் வாழைக்காய் கோலா உருண்டை

வாழைக்காயை வைத்து குழம்பு, வறுவல், பஜ்ஜி அதிகம் செய்து இருக்கலாம். இந்த முறை சற்று மாறுதலாக கோலா உருண்டை செய்யலாம். ரெசிபி இதோ...

செய்முறை :வாழைக்காயை இரண்டாக நறுக்கி, அடுப்பை ஆன் செய்து குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் விட்டு எடுத்து கொள்ளவும்.

தோலை உரித்து வாழைக்காயை கையால் நன்கு மசித்து, ஒரு பாத்திரத்தில் வைத்து விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்திக்கும் பெரிய வெங்காயம், தோல் உரித்த பூண்டு, தேங்காய் துருவல், மஞ்சள் பவுடர், சோம்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

சூடு ஆறிய பின், மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும். அந்த விழுதை வாழைக்காயுடன் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான வாழைக்காய் கோலா உருண்டை தயார்.

மாலையில், பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு டீ, காபியுடன் ஸ்நாக்ஸ் மாதிரி கொடுக்கலாம்.