முள்ளங்கி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

முள்ளங்கியை சிறு துண்டுகளாக்கி நீர் விட்டு அரைத்து வடிக்கட்டி சாறாக பயன்படுத்தலாம். இதன் சுவை நாவிற்கு பழகும் வரை, சிறிது எலுமிச்சை சாறும் உடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை அரைத்தவுடன் பருகினால் தொண்டை கரகரக்கும். அரைத்து வடிகட்டி, சிறிது நேரத்திற்கு பின் உட்கொள்ளலாம்.

முள்ளங்கி ஜூஸ் அடிக்கடி குடிக்க வயிறு சுத்தமாகும்; ரத்தத்திலுள்ள கழிவுகள் நீங்கும்; எலும்புகள் உறுதிப்படும்; விருந்தில் உண்ட கனமான உணவுகளை செரிக்க வைக்கும்.

பிஞ்சு முள்ளங்கியை அப்படியே சாப்பிடலாம்.

இதில் அதிக நுண் தாதுக்கள் நிரம்பியுள்ளதால் வாரத்தில், ஒன்று அல்லது இரண்டு நாள் ஜூஸாக குடிக்கலாம்.

ஜூஸை குடிக்கத் துவங்கியதும் லேசாக உடல் சோர்வடைவது போல் தெரியும். அதற்கு காரணம் வயிற்று பகுதியில் திரண்டிருக்கும் கொழுப்பை இது கரைக்கும்.

இதனால் ஏற்படும் மாற்றம்தான் சோர்வு போல் காட்டும். பின் படிப்படியாக உடலை வலுவாக்கும்.