ஆற்றலை அள்ளித்தரும் சப்போட்டா பாதாம் மில்க் ஷேக்!
சப்போட்டா ஆரோக்கியத்தை அள்ளித்தரும். நீர்ச்சத்து குறைவாக இருக்கும் நேரத்தில் சப்போட்டாவைச் சாப்பிடுவது உடலுக்குப் தேவையான ஆற்றலை உடனடியாக அளிக்கும்.
மேலும் சப்போட்டா பழத்தைச் சாப்பிடுவது நம் உடலுக்குப் புத்துணர்வு அளிக்கும்.
குறிப்பாக பரீட்சை நேரத்தில் குழந்தைகளுக்கு உடனடி ஆற்றல் தர சப்போட்டா கொண்டு மில்க் ஷேக்கை நொடியில் செய்து தரலாம்.
இதெல்லாம் தேவை : காய்ச்சிய பால் - 2 கப், நன்கு பழுத்த சப்போட்டா - 6, ஊற வைத்த பாதாம் பருப்பு - 10, ஐஸ் கட்டிகள், சர்க்கரை - தேவைக்கேற்ப.
சப்போட்டா பழங்களை தோல், விதையை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய சப்போட்டா பழத்துண்டுகளை பால், சர்க்கரையுடன் மிக்ஸியில் போடுங்கள்.
அதனுடன் ஊற வைத்த பாதாம், ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். ஜில்லென்ற சப்போட்டா மில்க் ஷேக் ரெடி!