கால்சியம் நிறைந்த நரிப்பயறு... நன்மைகள் அறிவோமா!!
இது ஒரு வகையான சிறு தானிய பயறு வகையை சேர்ந்தது. புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்களின் சிறந்த மூலமாகும். பார்ப்பதற்கு பச்சை பயறு போன்று பழுப்பு நிறத்தில் இருக்கும்.
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த, இந்த பயறு எலும்பு தொடர்பான பாதிப்புகளைத் தடுக்கும். மேலும் எலும்புகளை வலுவாக்கும்.
வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராகப் போராடும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
பாசி பருப்பைப் போலவே, நரிப்பயறு செரிமான நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். மலச்சிக்கலைத் தடுப்பது மட்டுமல்லாமல் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.
நரிப்பயறு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மன அழுத்தத்தையும் திடீர் பதட்டத்தையும் குறைக்கும் என ஆராய்ச்சி ஆய்வுகள் கூறுக்கின்றன.
ஆனால் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் காரணமாக, தலைச்சுற்றல், இருமல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது போன்ற பாதிப்பு ஏற்பட்டால் இதை தவிர்க்கலாம்.
பொதுவாக மற்ற பயறு வகைகளை ஊற வைப்பதுபோல் நரிப்பயறை இரவு முழுதும் ஊறவைத்து பிறகு வேகவைத்து சாப்பிட வேண்டும். இதனால் அதன் முழு நன்மைகளை பெறலாம்.