டேஸ்டியான சிக்கன் கபாப்.. செய்யறது ரொம்ப ஈஸிதான் !

இதெல்லாம் தேவை... 500 கிராம் சிக்கன், சிறிய துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு, 4 பச்சை மிளகாய், 3 ஸ்பூன் தயிர், சிறிதுமல்லிதழை, சிறிது புதினா

1 ஸ்பூன் சோலமாவு, 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன்தனியா தூள், 1/4 ஸ்பூன்சீரகதூள், 1/4 ஸ்பூன்கஸ் தூரிமேத்தி, தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய் பொரிக்க, 1 எழுமிச்சை பழம்.

ஸ்டெப் 1 : ஒரு மிக்ஸி ஜாரில் தயிர், பச்சை மிளகாய், மல்லிதழை, புதினா, இஞ்சி, பூண்டு, சேர்த்து நன்கு அரைக்கவும்.

ஸ்டெப் 2 : அரைத்த விழுதில் சோளமாவு மிளகாய் தூள் தனியா தூள் சீரகதூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்,

ஸ்டெப் 3 : ஐந்து நிமிடம் கழித்து சிக்கனில் அரைத்து கலந்து வைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்

ஸ்டெப் 4 : பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ததும் ஊறவைத்த சிக்கனை பொரித்து எடுக்கவும்

ஸ்டெப் 5 : கடைசியில் எழுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும் சுவையான சிக்கன் கபாப் தயார்