ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பீட்ரூட் மாதுளை ஜூஸ்...

பீட்ரூட் மற்றும் மாதுளம்பழம் இரண்டிலும் ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிகம் நிறைந்துள்ளது. இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பீட்ருட்டில் உள்ள இனிப்பு சுவை, மாதுளையில் உள்ள துவர்ப்பு சுவை இரண்டும் கலந்து புதிய சுவையில் இருக்கும். பீட்ரூட் மாதுளை ஜூஸை எப்படி செய்யலாம் என அறிந்துக்கொள்வோம்.

இதெல்லாம் தேவை : பீட்ரூட் - 1 கிண்ணம் நறுக்கியது, மாதுளம்பழம் முத்துகள் - 1 கிண்ணம், எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி, சர்க்கரை / தேன் - 2-3 தேவைக்கு ஏற்ப

பீட்ரூட் மற்றும் மாதுளையை பிளண்டர் அல்லது ஜூஸரில் அடித்து கொள்ளவும். 1/2 கிண்ணம் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.

பெரிய வடிகட்டியில் ஒரு ஸ்பூனால் அழுத்தி ஜூஸ் முழுவதும் வடிக்கவும். மீண்டும் அரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டலாம்.

எலுமிச்சை சாறு, சர்க்கரை, ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து ஜூஸுடன் கலக்கவும். சுவை சரி பார்த்து இனிப்பு தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஹெல்தி ஜூஸ் ரெடி

ஜூஸ் தயாரிக்கும் போது ஒரு சிட்டிகை கருப்பு உப்பு அல்லது சாட் மசாலாவை ஜூஸுடன் சேர்த்தால் சுவை அதிகமாக கிடைக்கும்.