சமையல் ருசிக்க ஈஸி டிப்ஸ் இதோ...

அடை, பக்கோடா செய்யும்போது மல்லிதழை, புதினா, கறிவேப்பிலையை பொடிசாக நறுக்கி சேர்த்து பாருங்கள். மணமும், ருசியும் கூடுவதுடன், செரிமானமும் சீராக இருக்கும்.

சர்க்கரை பொங்கல் செய்யும்போது, அரை கப் தேங்காய் பால் ஊற்றி கிளறினால், அற்புத சுவையாக இருக்கும்.

அவல் உப்புமா செய்யும்போது பயத்தம் பருப்பை, பதமாக வேகவைத்து உப்புமாவுடன் சேர்த்தால், சுவையாக நன்றாக இருக்கும்.

தயிர் வடை செய்யும்போது, உளுந்தம் பருப்புடன் ஆறு முந்திரி பருப்பை ஊற வைத்து, அரைத்து செய்தால் வடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

உளுத்தம் பருப்பு சிறிதளவு ஊறவைத்து அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து தோசை வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்

கோதுமையை நன்கு கழுவி, நான்கு மணி நேரம் ஊற வைத்து, உலர்த்தி அரைத்து வைக்கவும். இந்த மாவில் சப்பாத்தி செய்தால் மிகவும் மென்மையாக இருக்கும்