கருஞ்சீரகம் இருந்தால் இத்தனை பயன்களா!!

கருஞ்சீரகத்தில் உள்ள 'தைமோகியோனின்' என்ற வேதிப்பொருள், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

தொடர் இருமலால் பாதிக்கப்படுவோர், 1 தேக்கரண்டி கருஞ்சீரக பொடியை தேன், அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும்

ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி, இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

கருஞ்சீரகத்தில் 'இன்டெர்பிதான்' என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.

கருஞ்சீரக பொடியை, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும்.

தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம்.

கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். எனவே, வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால், உடல் நலனுக்கு சிறந்தது.