ஆரோக்கியம் தரும் முருங்கைப்பூ கூட்டு ரெசிபி

தேவையானப் பொருட்கள்: முருங்கைப் பூ - 2 கப், பாசிப்பருப்பு - 100 கிராம், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, பூண்டு பல் - 10

பச்சை மிளகாய் - 4, எண்ணெய், கடுகு, மஞ்சள் பொடி - சிறிதளவு, கறிவேப்பிலை, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

பாசிப்பருப்புடன் நறுக்கிய வெங்காயம், துண்டாக்கிய தக்காளி, பூண்டு, மஞ்சள் பொடி மற்றும் தேவையானளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, கறிவேப்பிலை, நீள வாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் தாளித்து, சுத்தம் செய்த முருங்கைப் பூ போட்டு வதக்கவும்.

பின், வேகவைத்த பாசிப்பருப்பு கலவை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

இப்போது ஆரோக்கியமான, மருத்துவ குணம் நிறைந்த, 'முருங்கை பூ கூட்டு' ரெடி.