நவராத்திரி ஸ்பெஷல் : கோதுமை லட்டு!

கோதுமை லட்டு என்பது முழு கோதுமை மாவு, இனிப்பு மற்றும் நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாரம்பரிய குளிர்கால இனிப்பு சிற்றுண்டி ஆகும். இதை செய்வது மிகவும் எளிது.

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை, வெல்லத்துருவல், நெய் - தலா அரை கப்,

முந்திரி - தேவையான அளவு, ஏலக்காய்த்துாள் - அரை தேக்கரண்டி, பால் - ஒன்றரை தேக்கரண்டி.

செய்முறை: முதலில் பாதி நெய்யை வாணலியில் விட்டு சூடாக்கி, உடைத்த முந்திரியை வறுத்து எடுக்கவும்.

அதே நெய்யில் கோதுமை மாவைச் சேர்த்து, அடுப்புத் தணலைக் குறைத்து, நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும்.

இடையிடையே, சிறிது பாலைத் தெளிக்கவும். மாவு நன்கு வறுபட்டதும் இறக்கி விடவும். மிக்ஸியில் சர்க்கரை மற்றும் வெல்லத்தை சேர்த்து பொடிக்கவும்.

இதையும் கோதுமை மாவுடன் சேர்த்து, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்துாள், மீதமுள்ள நெய் சேர்த்து கலந்து, லட்டுகளாகப் பிடிக்கவும்.