ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம்.. பூண்டு!
பூண்டு ஆன்ஜியோடென்சின் ஐஐ எனும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும் மற்றும் ரத்த நாளங்களை; சீராக்கி ரத்த ஓட்டத்துக்கு உதவும்.
இதை பச்சையாக சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை சரி செய்யலாம்.
ஆறு பூண்டை வறுத்து சாப்பிடுவதால், பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
இரண்டு முதல் நான்கு மணி நேரத்தில் பூண்டு உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, உடல் நலனை பாதுகாக்கும்.
நான்கு முதல் ஆறு மணி நேரத்தில் உடலின் மெட்டபாலிசம் துாண்டப்பட்டு, உடலில் உள்ள அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும். தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
ஆறு முதல் ஏழு மணி நேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டிபாக்டீரியா, ரத்த நாளங்களில் நுழைந்து, ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராட ஆரம்பிக்கும்.
ஏழு முதல் பத்து மணி நேரத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டாக்கும்.
பத்து முதல் 24 மணி நேரத்தில் பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்து, இதய நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். தமனிகளை சுத்தம் செய்யும்.
எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும். உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் மற்றும் உடலின் சோர்வை போக்கி, புத்துணர்ச்சியை கொடுக்கும்.