லவங்கப்பட்டையின் மருத்துவ குணங்கள் என்னென்ன?
அசைவ உணவில் முக்கியமாக சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் ஒன்றான லவங்கப்பட்டையில் ஏராளமான மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளன.
குறிப்பாக பிரியாணியை தாங்கிப்பிடிப்பதே இந்த பட்டையின் மணம்தான்.
பிரியாணியில் தனது பண்பை புகுத்தி, செரிமானத்தைத் தூண்டும் இந்த லவங்கப்பட்டை.
இதிலுள்ள சின்னமால்டிஹைடு வேதிப்பொருள் ஆன்டி பாக்டீரியல் பண்பு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், வளர்சிதை மாற்றத்தைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
ரத்தத்திலுள்ள கொழுப்பு அமிலங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இதுதவிர, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.