குட்டீஸ்களுக்கு பிடித்தமான ரஸ்க் ஐஸ்கிரீம்

தேவையானப் பொருட்கள்: ரஸ்க் துண்டு - 6, பசும்பால் - 3 கப், சர்க்கரை - 50 கிராம், வெண்ணிலா எசன்ஸ் - சிறிதளவு.

பசும்பாலில் சர்க்கரை கலந்து, சுண்டக் காய்ச்சவும்.

ரஸ்க் துண்டுகளை மிக்ஸி ஜாரில் பொடியாக அரைக்கவும்.

பின், காய்ச்சிய பாலில் ஊறவைத்து கூழாக்கி ஆறவிடவும்.

தொடர்ந்து, வெண்ணிலா எசன்ஸ் கலந்து, பிரீசரில் 1 மணி நேரம் வைக்கவும்.

இப்போது, சுவையான 'ரஸ்க் ஐஸ்கிரீம்' ரெடி. சிறுவர்கள் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.