யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் காசினிக்கீரை!! பயன்கள் குறித்து அறிவோமா....
காசினிக்கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன.
தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் என்பதால் எடையை குறைக்க விருப்புவோர் இதை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
உடலில் அதிகமாக உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் . மூட்டு வலி உட்பட உடல்வலியைப் போக்கும் தன்மை உள்ளது.
இதில் கால்சியம் நிறைந்து காணப்படுவதனால் பற்கள், எலும்புகளின் உறுதியை மேம்படுத்துக்கிறது. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை தரலாம்.
இன்சுலின் சுரப்பை இந்த கீரை சுரக்க செய்வதால், நீரிழிவு பாதிப்புக்கு மிகச்சிறந்த மருந்து. பாதிப்புள்ளவர்களுக்கு புண்கள் வந்தால், இந்த கீரையை அரைத்து பற்று போட்டு கட்டினால், விரைவில் குணமாகும்.
பித்தப்பை கோளாறு, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கல் பிரச்னை போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது. காசினி கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயம் போல காய்ச்சி குடித்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.
வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு போன்ற பிரச்சனைகளில் அவதிப்படும் பெண்கள், கண்டிப்பாக அடிக்கடி காசினிக் கீரையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளவும்.